spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

திருப்பூர் : காரில் கள்ளச்சாராயம் கடத்திய 3 பேர் கைது 2 பேர் தப்பி ஓட்டம், 2 லிட்டர் கள்ளசாராயம் பறிமுதல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

திருப்பூர் தாராபுரம் சாலையில் காரில் கள்ளச்சாராயம் கடத்தி வருவதாக மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் தாராபுரம் ரோடு உஷா தியேட்டர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நண்பரது இல்ல விசேஷத்திற்காக வெள்ளகோவில் சென்ற போது அங்கு 5 லிட்டர் கள்ள சாராயம் கொடுத்ததும், மூன்று லிட்டர் சாராயத்தை 5 பேரும் சேர்ந்து அங்கு குடித்துவிட்டு மீதமுள்ள 2 லிட்டர் கள்ள சாராயத்தை காரில் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

திருப்பூர் :  காரில் கள்ளச்சாராயம் கடத்திய  3 பேர் கைது 2 பேர் தப்பி ஓட்டம், 2 லிட்டர் கள்ளசாராயம் பறிமுதல்!

திருப்பூர் தாராபுரம் சாலையில் காரில் கள்ளச்சாராயம் கடத்தி வருவதாக மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மாநகர மதுவிலக்கு காவல் ஆய்வாளர் பிரபா தேவி தலைமையில் போலீசார் தாராபுரம் ரோடு உஷா தியேட்டர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரினை வழிமறித்து சோதனை செய்தபோது திடீரென அந்தக் காரில் இருந்து இரண்டு பேர் இறங்கி ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து அந்த காரில் இருந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில் மூன்று பேரும் அதிக மது போதையில் இருந்தனா். இந்நிலையில் காரை சோதனையிட்ட போது காரில் 2 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டது இதனால் காரில் இருந்தவர்களை மதுவிலக்கு போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசார் விசாரணையில் டி.கே.டி மில் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி(40), பிரேம்குமார்(37) சக்தி(32) என்பதும், அவர்கள் நண்பரது இல்ல விசேஷத்திற்காக வெள்ளகோவில் சென்ற போது அங்கு 5 லிட்டர் கள்ள சாராயம் கொடுத்ததும், மூன்று லிட்டர் சாராயத்தை 5 பேரும் சேர்ந்து அங்கு குடித்துவிட்டு மீதமுள்ள 2 லிட்டர் கள்ள சாராயத்தை காரில் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. அவர்கள் மாநகர மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 லிட்டர் கள்ளச்சாராயம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தப்பியோடிய கிருஷ்ணகுமார், தியானேஸ்வரன் ஆகியோரை வெள்ளக்கோவில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தீபாவளி – மக்களின் பயண்பாட்டிற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img