ராகுல் காந்தியின் இட ஒதுக்கீடு குறித்த பேச்சுக்கு அமித்ஷா கடும் எதிர்ப்பு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பாஜக நாட்டில் இருக்கும் வரை சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது எனவும், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளிப்பதற்கு ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்!

ராகுல் காந்தியின் இட ஒதுக்கீடு குறித்த பேச்சுக்கு அமித்ஷா கடும் எதிர்ப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 43 சட்டமன்ற தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 13ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான சட்டமன்ற தொகுதிகளில் பாஜக தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது மகாராஷ்டிரா மாநில தேர்தல் பரப்புரையில் இஸ்லாமிய உலாமாக்களிடம் இஸ்லாமியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் உதவும் என ராகுல் காந்தி உறுதி அளித்ததாகவும், ஆனால் நாட்டில் மதத்தின் அடிப்படையில் நாட்டில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

233 தொகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்த -பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி நாட்டில் இருக்கும் வரை சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது என தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீடு குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் காந்தியை ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரை களத்தில் இருந்து எச்சரிப்பதாகவும் நாட்டில் மதரீதியிலான இட ஒதுக்கீடு நடைமுறையை கொண்டு வர நினைத்தால் அது நாட்டின் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக | திமுக கூட்டணி 180- 200 தொகுதிகள் வெற்றி
12:14
Video thumbnail
திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி - The Print
01:13
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img