FedEx கூரியர் Scam மூலம் ரூபாய் 1.18 கோடி இணைய வழி மோசடி செய்த வழக்கில் 7 குற்றவாளிகள் கைது.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு மிகப்பெரிய அளவிலான ஃபெடெக்ஸ் கூரியர் மோசடியில் ஈடுபட்ட ஏழு நபர்களை அதிரடியாக கைது செய்துள்ளது. FedEx கூரியர் Scam மூலம் ரூபாய் 1.18 கோடி இணைய வழி மோசடி செய்த வழக்கில் 7 குற்றவாளிகள் கைது . ஏற்கனவே ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாக இருந்த இரண்டு பேரையும் கைது செய்துள்ள சைபர் கிரைம் போலீசார்

சென்னையில் வசிக்கும் பாதிக்கபட்ட நபர் ஒருவரிடம் தங்களுக்கு FedEx கூரியர் மூலம் தடை செய்யபட்ட பார்சல் வந்துள்ளதாகவும் தாங்கள் மும்பை சைபர் க்ரைம் பிரிவு அதிகாரிகள் பேசுவதாக சொல்லி தாங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ரூ.118 கோடி பணத்தை அனுப்ப சொல்லி மிரட்டி  பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர்.பழனியில் சோகம் கடன் பிரச்சனையால்  : ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் தற்கொலை

02/08/2024 அன்று. சென்னையைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவருக்கு, பெடெக்ஸ் வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி என்று போலியாக ஏமாற்றிய ஒரு நபரிடமிருந்து அழைப்பு வந்தது.

அவர் பாதிக்கபட்டவர் பெயரில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் உள்ள பார்சல் வந்துள்ளதாக சொல்லி அந்த அழைப்பை மும்பை சைபர் கிரைம் அதிகாரி ஒருவருக்கு மாற்றியுள்ளார். அந்த போலி சைபர் கிரைம் அதிகாரி நீங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க நாங்கள் அனுப்பும் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்ப வேண்டும் இல்லையென்றால் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளார்.

இந்த அச்சுறுத்தல்களை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் அவர் ஏமாற்றபடுகிறோம் என்பதை தெரிந்துகொள்ளும் முன்பே பல வங்கி கணக்குகளுக்கு ரூ. 1,18,00,000/- பணத்தை அனுப்பியுள்ளார்.

பழனியில் சோகம் – கடன் பிரச்சனையால் : ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் தற்கொலை .

இது ஒரு ஏமாற்று வேலை என்பதை அறிந்த பின்னர் அவர் NCRP-யில் ஆன்லைன் புகார் அளித்தும், சென்னையில் உள்ள சைபர் குற்றப் பிரிவில் நேரிலும் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் சென்னை சைபர் குற்றப் பிரிவு தலைமையகத்தில் SCCIC குற்ற61. 36/2024, U/s. 318 (4) 319 (2) 336 (3) 340 (2) BNS-2023 & Sec 66 DLT (Amendment)-Act-2008ன்படி FIR பதிவு செய்யபட்டது.

இந்த வழக்கில் முதற்கட்ட விசாரணையில் குஜராத்தை சேர்ந்த மோசடி வங்கி கணக்கு துவங்கிய ரமேஷ்பாய் பதபாய் போக்ரா, சைபர் கிரிமினல் நெட்வொர்க்கின் முகவர்களாக மகாராஷ்டிராவை மையமாக கொண்டு செயல்பட்ட விவேக் பெலாடியா தமாஜ்பாய் மற்றும் பரேஷ் நரஷிபாய் கல்சாரியா ஆகியோர்களும் கைது செய்து சிறையில் அடைக்கபட்டனர்.

பழனியில் சோகம் கடன் பிரச்சனையால்  : ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் தற்கொலை

மேலும் இந்த குற்ற செயல் செய்த முகவர்களுக்கும் சைபர் குற்றவாளிகளுக்கும் இடைதரகராக செயல்பட்ட குஜராத்தின் கச் மாவட்டத்தைச் சேர்ந்த விபுல் பாகுபாய் கோவதியா என்பவரும் கைது செய்யபட்டார்.

தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு மேம்பட்ட புலனாய்வு தொழில் நுட்பங்கள் மற்றும் பகுப்பாய்வு முறைகளை பயன்படுத்தி இந்த கும்பலின் முக்கிய குற்றவாளிகள் மகாராஷ்டிரா மாநிலம் குர்துவாடியை சேர்ந்த சாஹில் மற்றும் ஷாருக்காவைக் கண்டறிந்து கைது செய்தது.

சாஹில் OTP APK File-களை வங்கி கணக்கு வைத்திருக்கும் நபரின் செல்போனில் பதிவேற்றம் செய்து இயக்கி மோசடியான வங்கி பரிவர்த்தனைகள் செய்ய உறுதுணையாக இருந்து உள்ளார்.

ஷாருக்கா அவருக்கு உதவியாக இருந்துள்ளார். இந்த ஒட்டுமொத்த மோசடியும் பங்களாதேஷ் டாக்கா விலிருந்து முக்கிய குற்றவாளிகள் மூலம் இயக்கி செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. தற்போது (Face to Face (F2F). Agents) எதிகள் சாஹில் மற்றும் ஷாருக்கா இருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக | ADMK | TVK | MDMK | MK Stalin | DMK | BJP | Modi
14:05
Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
Video thumbnail
சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து தீ விபத்து.. நூலிழையில் உயிர் தப்பி ஓடிய இருவர்..
01:32
Video thumbnail
உலகம், மூன்றாம் உலகப் போரை நோக்கி நகர்கிறது
00:52
Video thumbnail
இஸ்ரேல் - ஈரான் போர் | மூன்றாம் உலகப்போர் வருகிறது | போர் நிறுத்தம் வேண்டும் | Iran-Israel War
10:47
Video thumbnail
பெரியார் மண்ணில் பாஜகவின் மதவேஷம் எடுபடாது
00:54
Video thumbnail
முருகன் மாநாடு - ஆன்மிகமா? அரசியலா?
01:00
Video thumbnail
இந்து அமைப்புகள் இந்துக்களுக்கு செய்த நன்மைகள்?
00:57
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img