spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

‘மரகத நாணயம் 2’ படத்தில் இணையும் நடிகர் சத்யராஜ்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மரகத நாணயம் 2 திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் இணைவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஏ ஆர் கே சரவணன் இயக்கத்தில் மரகத நாணயம் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், டேனியல் போப், ராம்தாஸ், எம் எஸ் பாஸ்கர், மைம் கோபி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் நான் அவரைப் போல யாரும் இருக்க முடியாது – துல்கர் சல்மான் பேச்சு!

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இரும்பொறை எனும் மன்னனுக்கு சொந்தமான மரகத நாணயம் இந்த நூற்றாண்டில் வாழும் மனிதர்களின் கையில் கிடைக்கிறது. ஆனால் அந்த மரகத நாணயம் யாருக்கெல்லாம் கிடைக்கிறதோ அவர்கள் எல்லாம் இறந்து விடுகிறார்கள். அதற்கு அந்த இரும்பொறை என்ற மன்னனின் ஆவி தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இதனை படத்தின் நாயகன் ஆதி கைப்பற்ற முயற்சிக்கிறார். கடைசியில் அதை கைப்பற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதையாக இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

‘மரகத நாணயம் 2’ படத்தில் இணையும் நடிகர் சத்யராஜ்!

எனவே அடுத்தது மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அதன்படி நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோரும் மரகத நாணயம் 2 திரைப்படத்தில் நடிக்க போவதாக தொடர்ந்து பல தகவல்கள் வெளிவருகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் இணைவதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது இரும்பொறை மன்னன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம் சத்யராஜ். இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகார அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img