தவெக மாநாட்டில் நடிகர் விஷால் பங்கேற்பு; அரசியலில் இறங்குகிறார் விஷால்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தவெக மாநாட்டில் நடிகர் விஷால் பங்கேற்பு; அரசியலில் இறங்குகிறார் விஷால்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்தவுள்ள மாநாட்டில் ஒரு வாக்காளர் என்ற முறையில் கலந்துக் கொள்வேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி -2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார்.அந்த கட்சியின் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் அருகே விக்ரவாண்டியில் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தவெக கட்சியில் நடிகர் தாடி பாலாஜி போன்ற பல நடிகர்கள் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் எனக்கு அழைப்பு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் ஒரு வாக்காளர் என்ற முறையில் கலந்துக் கொள்வேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். அவருடைய கொள்கை என்ன என்பதனை, அவர் மக்களுக்கு என்ன கூற போகிறார் என்பதை பார்ப்பதற்காகவே மாநாட்டுக்கு செல்வேன் என்றார்.

ஈஷா அறக்கட்டளை மீதான புகார்கள் முழுமையாக விசாரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவேனா என்பதற்கு இப்போது என்னால் பதில் சொல்ல முடியாது. முதலில் விஜய் மாநாடு நடத்தட்டும். அவர் முதல் அடி எடுத்து வைக்கட்டும், அவர் என்ன செய்யப் போகிறார்?அவருடைய செயல்பாடுகள் என்ன? என்ன நல்லது செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்துதான் கட்சியில் இணைவேனா என்பது குறித்து முடிவெடுக்க முடியும். தமிழக வெற்றி கழக கட்சியில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். ஆனாலும் அரசியலில் இறங்கி பணியாற்ற ஆர்வம் உள்ளவராகவே இருந்து வருகிறார்.

திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்தார். நீண்ட காலமாக நடிகர் ராதாரவி, சரத்குமார் ஆதிக்கத்தில் இருந்த நடிகர் சங்கத்தை,சினிமா துறையில் முதன்முதலாக மாற்றத்தை ஏற்படுத்தியவர் விஷால். அதன் பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் களம் இறங்கி போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். அதிரடிக்கு பெயர்போன நடிகர் விஷால் தற்போது தவெக கட்சியில் இணைந்து அதன் வாயிலாக அரசியலில் இறங்கலாம் என்று கூறப்படுகிறது.

 

Video thumbnail
உலகத்திற்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் ராஜாளி கழுகு
01:14
Video thumbnail
உலகத்திற்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் ராஜாளி கழுகு | மனிதர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் | Eagle
07:22
Video thumbnail
தவெக 23 சதவீதம்.. திமுக 45 சதவீதம்.. புதிய கருத்து கணிப்பு..
01:14
Video thumbnail
TVK 23 Percent | DMK 45 Percent | Opinion Poll | புதிய கருத்து கணிப்பு | தவெக | திமுக | MK Stalin
07:49
Video thumbnail
சிவசேனா போல் திமுகவை உடைப்பதே பிஜேபியின் திட்டம்
01:09
Video thumbnail
எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில் சிக்கிக்கொண்டார்
01:08
Video thumbnail
தவெக-வை தொடங்க சொன்னதே பிஜேபி தான்
01:08
Video thumbnail
கரூர் பிரச்சாரத்தை சினிமா பணியில் பார்க்கும் தவெக தொண்டர்கள்
01:08
Video thumbnail
கரூர் பிரச்சாரத்தை சினிமா பணியில் பார்க்கும் தவெக தொண்டர்கள் |சமூக வலைதளங்களில் கொண்டாடும் தவெகவினர்
12:24
Video thumbnail
கரூர் வழக்கு சிபிஐ விசாரிக்க உத்தரவு -உச்ச நீதிமன்றம்
01:06
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img