ஆரியம்,திராவிடம் குறித்து நிதியமைச்சருக்கு தெரியவில்லை – ஆ.இராசா.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆரியம்,திராவிடம் குறித்து நிதியமைச்சருக்கு தெரியவில்லை – ஆ.இராசா.

 

இந்தியாவில் ஆரியம், திராவிடம் என்ற இரண்டு பண்பாடுகள் இருந்தது. இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தெரியவில்லை என்று திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.இராசா பேசினார்.

சாதி ஒழிய வேண்டும் என்று முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது மட்டும் அல்லாமல் 50 ஆண்டுகள் சட்ட மன்றத்திலும் வெளியில் இருந்தும் குரல் கொடுத்த இந்தியாவிலேயே ஒரே அரசியல் தலைவர் உண்டு என்றால் அது கலைஞர் மட்டுமே அவரை தத்துவத்தின் தலைவன் என்று கூறலாம்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கத்தில் நடைபெற்ற நூலாசிரியர் மணிகோ பன்னீர்செல்வம் எழுதிய நீலச்சட்டைக் கலைஞர் என்னும் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும்,திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.இராசா கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய ஆ.இராசா, இந்தியாவில் 1925 இருந்து 1930 களில் தான் ஆர்எஸ்எஸ் இயக்கம் தோன்றியது.கம்யூனிஸம், சுயமரிமாதை இயக்கமும் தொடங்கப்பட்டது. வேறுபட்ட தத்துவங்கள் தோன்றியது.இவை தோன்றி நூறு ஆண்டுகள் ஆகியுள்ளது. இவை அனைத்தையும் அறிந்தவர் கலைஞர். நீல சட்டை கலைஞர் மட்டும் அல்ல அவர் அனைத்து கலர் சட்டைக்கும் பொருத்தமானவர்.

நான் சாதியை ஒழிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் அதில் உன் மதம் குறுக்கே வந்தால் அதையும் ஒழிப்பேன் என்று பெரியார் கூறினாரே தவிர பெரியாருக்கு கடவுள் மீது எந்த கோபம் இல்லை என்றார். அதேபோன்று சாதி ஒழிய வேண்டும் என்று முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் மட்டும் அல்லாமல் 50 ஆண்டு காலம் சட்ட மன்றத்திற்கு வெளியிலும் குரல் கொடுத்த இந்தியாவிலே ஒரே அரசியல் தலைவர் உண்டு என்றால் அது கலைஞர் மட்டும் தான். கலைஞர் செய்த மிக பெரிய சாதனைகள் அனைத்தும் தேர்தல் வாக்குறுதிகளில் வராதவை என்றார்.

கலைஞர் தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து அதன் அடிப்படையில் மக்களுக்கு நலதிட்டங்களை செயல் படுத்தியதில்லை. மக்கள் மீதிருந்த தீராத பற்றால் மட்டுமே பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.

தற்போது குடும்ப அரசியல் என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அனைவரும் சமம் என்று நினைப்பவனே உண்மையான நல்ல தலைவன் என்று நெஞ்சிக்கு நீதி படத்தின் மூலம் தெரிவித்தவர் நம்முடைய துணை முதலமைச்சர் உதயநிதி என்றார். திராவிடத்தை கலைஞர் ஏன் ஏற்று கொண்டார் என்றால் ஆரிய பண்பாடு திராவிட பண்பாடு என்று இரண்டு பண்பாடுகள் உள்ளது. குலம் வேறு சாதி வேறு இது தான் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு புரியவில்லை. அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற சட்டம் தற்போது தீவிர படுத்தப்பட்டுள்ளது.சாதி மதம் ஒழிய வேண்டும் என்று அம்பேத்கர்,பெரியார் வழியில் கடைசி வரைக்கும் போராடி பல சாதனைகளை படைத்தவர் கலைஞர் என்றார். சாதி ஒழிய வேண்டும் என்று விரும்பிய அரசியல் தலைவர் ஒருவர் இருந்தார் என்றால் அது கலைஞர் மட்டும் தான்..

கி.பி.8 நூற்றாண்டில் தொடங்கிய ஜாதி பிரிவினையை சமத்துவபுரம் மூலம் தீர்வு கண்டவர் கலைஞர்.தமிழ் மொழியை தமிழ் பண்பாட்டை வைத்துக்கொண்டு சாதி இல்லாத சமத்துவ பண்பாட்டை படைக்க வேண்டும் என்பதற்காக சாதி ஒழிப்பில் பெரியராகவே வாழ்ந்தவர் கலைஞர் என்றும் கூறினார்.

கடவுள் குறித்து பெரியார் சொன்ன கருத்துக்களுக்கு எதிராக 1969இல் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி இஸ்மாயில் இது அவருடைய தனிப்பட்ட கருத்து இது யாரையும் புண்படுத்தவில்லை என தீர்ப்பளித்தார். அதன் பிறகும் அது குறித்தான வழக்குகளில் அதே தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஸ்ரீரங்கம் கோயில் எதிரில் உள்ள பெரியார் சிலை மத உணர்வுகளை புண்படுத்துகிறது என்று சொல்லி ஒரு நீதியரசர் அது தொடர்பாக தொடுக்கப்பட்ட குற்றவியல் வழக்கை ரத்து செய்கிறார்.

இது எங்கே போய் நிற்கும் என்று தெரியவில்லை. ஒருவேளை பெரியார் சிலையே தமிழகத்தில் இருக்கக் கூடாது என்று யாராவது வழக்கு போட்டாலும் அதன் பிறகும் தமிழ் சமுதாயம் தூங்கிக் கொண்டிருக்க போகிறதா என்ற கேள்வியை முன் வைக்கிறேன் என்று கூறினார். இவ்வாறு ஆ.இராசா பேசினார்.

 

Video thumbnail
பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு 9.69 சதவீதமாக உயர்வு
00:44
Video thumbnail
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் டிஜிட்டல் முறையில் பாடத்திட்டம்
00:37
Video thumbnail
தமிழே தெரியாதவர்களுக்கு தமிழ்நாட்டு அரசு பணியா?
00:55
Video thumbnail
திராவிட மாடல் அரசு 4 ஆண்டுகள் சாதனை! வேதனை!!
00:31
Video thumbnail
திராவிட மாடல் அரசு 4 ஆண்டுகள் சாதனை! வேதனை! | தொழிலாளர்களை கண்டுக்கொள்ளாத முதல்வர் | DMK | MK Stalin
14:34
Video thumbnail
தீவிரவாதிகளுக்கு ஆதரவான கட்சி திமுக - சங்கிகள் சதித்திட்டம்
00:51
Video thumbnail
மதுரை ஆதீனத்தை இஸ்லாமிய தீவிரவாதிகள் கொ*ல முயற்சியா
00:39
Video thumbnail
வன்முறையை விதைக்கும் பாஜகவினர்
00:51
Video thumbnail
2026 தேர்தல் | கலவரத்தை தூண்ட சங்கிகள் திட்டம்
00:34
Video thumbnail
2026 தேர்தல் | கலவரத்தை தூண்ட சங்கிகள் திட்டம் | வசமாக சிக்கிய மதுரை ஆதினம் | Madurai Adheenam
13:51
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img