spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

உடுமலை அருகே ஜீப் மீது டெம்போ ட்ராவலர் மோதி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

உடுமலை அருகே ஜீப் மீது டெம்போ ட்ராவலர் மோதி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி.உடுமலை அருகே ஜீப் மீது டெம்போ ட்ராவலர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் நடைபெற்ற தனது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்று இருந்தார்.

பின்னர் நேற்றிரவு அனைவரும் பொலிரோ ஜீப்பில் உடுமலை மார்க்கமாக பழனிக்கு திரும்பி கொண்டிருந்தனர். நள்ளிரவு உடுமலை அருகே புறவழிச்சாலையில் கருப்புசாமி புதூர் என்ற இடத்தின் அருகே சென்றபோது தியாகராஜனின் ஜீப் மீது எதிரே பழனியில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற டெம்போ டிராவலர் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

நடிகை தமன்னாவுடன் இணைந்து நடிக்கும் பிரபல சீரியல் நடிகர்!

இந்த கோர விபத்தில் பொலிரோவில் பயணம் செய்த தியாகராஜன், அவரது மனைவி ப்ரீத்தி, மகன் ஜெய பிரியன் மற்றும் அவரது தாயார் மனோன்மணி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தியாகராஜனின் தந்தை நாட்ராயன், அவரது மற்றொரு மகன் ஜீவப்பிரியன் ஆகியோர் பலத்த காயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் டெம்போ ட்ராவலரில் பயணம் செய்த 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக உடுமலை காவலதுறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img