டானா புயல் காரணமாக ஒடிசா, மேற்குவங்க துறைமுகங்களில் அபாய புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. டானா தீவிர புயல் நாளை அதிகாலை கரையை கடக்க உள்ள நிலையில் ஒடிசா, மேற்குவங்க துறைமுகங்களில் அபாய புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக ஒரிசா, மேற்கு வங்கம் மாநிலங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் நாளையும் இரு மாநிலங்களிலும் கடுமையான புயல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதனால் ஒடிசாவின் 3 துறைமுகங்களில் (Puri, Dhamara, Paradip) 10ஆம் எண் அபாய புயல் எச்சரிக்கை கூண்டு, 1துறைமுகத்தில் (Gopalpur) 8ஆம் எண் அபாய புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இது என் மனதிற்கு நெருக்கமான படம்…. ‘ஜீனி’ குறித்து பேசிய ஜெயம் ரவி!
அதேபோன்று மேற்கு வங்கத்தின் 3 துறைமுகங்களில் (Kolkata, Haldia, Sagar Island) 9ஆம் எண் அபாய புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் தான் பாதிப்புகள் குறித்து தெரியவரும்.