spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தவெக – மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில்  வரவேண்டாம்   – தொண்டா்களுக்கு விஜய் அறிவுறை.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டிற்கு வருகின்ற தொண்டா்களின் பாதுகாப்பை கருதி யாரும் இருசக்கர வாகனத்தில் வரவேண்டாம் என்று அக்கட்சியின் தலைவா் விஜய் அறிவுறை வழங்கி உள்ளாா்.

 தவெக - மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வரவேண்டாம் - தொண்டா்களுக்கு விஜய் அறிவுறை.

இது குறித்து அவா் தனது X வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது.

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,

பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன். காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன்.

அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு,

மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும். நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளாா்.

2026 ல் நடிகர் விஜய் ஆட்சியை பிடித்து விடுவாரா? அவர் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும்?

 

 

Video thumbnail
ஜாக்கி மூலம் பழமையான கோவில்கள் பாதுகாப்பாக உயர்த்தல்; இடிக்காமல் கோவிலை உயர்த்தும் நவீன ஜாக்கி முறை
00:59
Video thumbnail
வங்கதேசத்தின் தௌலத்தியா காட் பகுதியில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 23 பேர் உயிரிழந்தனர்
01:44
Video thumbnail
தேர்தல் களம் 2026; தவெக என்ன செய்கிறது? #vijay #tvk
01:15
Video thumbnail
தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப் போவதில்லை என கமல் அறிவிப்பு
00:46
Video thumbnail
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..
00:45
Video thumbnail
எனர்ஜி தட்டுப்பாடு
01:25
Video thumbnail
எல்பிஜி புதிய முன்பதிவு விதிகளில் மாற்றம்
00:56
Video thumbnail
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு |திமுக தொகுதிப் பங்கீடு முடிவு |தவெக என்ன செய்கிறது? DMK ADMK TVK
12:59
Video thumbnail
தி.மு.க - வி.சி.க தொகுதி ஒப்பந்தம்
00:51
Video thumbnail
தேர்தல் களம் 2026 | திமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி | DMK Vs ADMK | MK Stalin | Edappadi Palaniswami
07:51
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img